நான் கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சித்திரைத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அதில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கலந்து கொண்டேன். இதற்கு முன் நடந்த திருவிழாக்களில் புகைப்படம் எடுக்க வசதி இல்லாமல் இருதது. இம்முறை அக்குறை இல்லாததால் தேரோட்ட அழகினை களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேரின் சிற்ப வேலைப்பாட்டினை காணும்போது பாரத பூமியில், அதுவும் தென்னகத்தில், தமிழகத்தில், மதுரையில் பிறப்பெடுக்கும் வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் கண்டு மகிழ்ந்த புகைப்படத்தின் சிலத் தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு.
அசைந்தாடி வரும் தேரின் அடிப்பாகத்தில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அமைந்துள்ள இறைவனின் திருக்கோலங்கள்
அசைந்து அசைந்து ஆடி வரும் இறைவனின் தேரின் கம்பீரத் தோற்றம்

2 comments:
excellent photography and fantastic tamil. very good keep it up.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயலலிதா
Post a Comment