2008 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத் தினத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மற்றும் வீடியோ காட்சிகளின் அணிவகுப்பு. திருக்கல்யனத்தன்று அண்ணலின் அழகிய வதனத்தில் என்றுமில்லாத ஆனந்தமும், பெருமிதமும் கலந்து உயிரோட்டமாய் இருக்குமென்றால், அன்னையின் முகத்திலோ நாணமும் சந்தோஷமும் போட்டி போட்டு விளங்கும் என்றால் அது மிகையல்ல.
நான் மதுரையில் வாழ்ந்த காலத்தில், சிறு குழந்தையாய் இருந்த காலத்தில் ஒரு அதிர வேட்டு கேட்டவுடன், வடக்கு மாசி வீதிக்கு செல்வோம். அங்கு ஆண்டவனின் தரிசனம் பெற செல்வோம். பின்னர் அந்த அதிர வேட்டுக்கும் வேட்டு வைத்தார்கள் புண்ணியவான்கள். அதன் பின்னர் வெகு காலம் ஆயிற்று, மீண்டும் அன்னையின் தரிசனம் பெற.
இப்பொழுதெல்லாம் குழந்தைகளின் கோலாட்டம், கேரளா வாத்யம், பொய்க்கால் குதிரை, கரகம் என்று பழங் கலைகளின் புதிய அணிவகுப்பு. இதில் என்றும் மாறாதது, திருவிழா நாட்களில் மட்டுமே கிடைக்கும், ரோஸ் மிட்டாய், தேன் மிட்டாய் அதனை சுமந்து வரும் ஸ்டாண்ட், மண்ணெண்ணெய் விளக்கு.
அம்மை, அப்பனின் தரிசனம் பெறுங்கள், இனி அதிகம் பேசாமல் அவ்வப்பொழுது சிறிய விளக்கமளிக்க வருகின்றேன்.

யானை வாகனத்தில் வரும் அப்பன், அன்னை பிரியாவிடையுடன்
(சோமாஸ்கந்த மூர்த்தம்)
* * * *
(சோமாஸ்கந்த மூர்த்தம்)
* * * *
நாணமும், மகிழ்ச்சியும் நடனமாட பல்லக்கினில் பவனி வரும் அன்னை மீனாக்ஷி
* * * *
அம்மையப்பனின் திருமணம் காண வந்த குன்றாது முருகப் பெருமான்.
* * * *
* * * *
* * *
* * * *
அங்கு எடுக்கப்பட்ட மொக்கைப் படம், பஞ்சு மிட்டாய் மற்றும் பலூந்தங்க அது.
மதுரையில் மேல மாசி வீதியில் ஆரிய பாவன் அருகில், பூக்கொட்டும் இடம் என்று அழைப்பார்கள். அங்கு இரு பொம்மைகள் கையில் மாலையும், ஒரு கூடையில் உதிரி புஷ்பங்களும் வைத்து ஒரு கயிற்றில் கட்டப் பட்டிருக்கும். அதனை கீழிருந்து ஆட்டி வைப்பார்கள், அந்த பொம்மைகள் இறைவனுக்கும், இறைவிக்கும் மாலை மரியாதை செய்யும். இதனை பார்ப்பதற்கு என்றே அங்கு அதிகக் கூட்டம் இருக்கும். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சி (ஒலி இல்லாதது). மேலே இறைவனுக்கும் கீழே இறைவிக்கும். (இறைவன் யானை வாகனத்தில், இறைவி புஷ்ப பல்லக்கினில்)

No comments:
Post a Comment