Saturday, October 11, 2008

ஹிந்தி இருவாரக் கொண்டாட்டம்



கடந்த செப்டம்பர் 15 அன்று எங்கள் அலுவலகத்தில் ஹிந்தி இருவாரக் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். நிகழ்ச்சியில் எங்கள் முதன்மை பொறியாளர் (Chief Engineer(E)SR) தலைமை தாங்கினார். தக்ஷின பாரத ஹிந்தி பிரசார் சபாவின் தேர்வு செயலாளர் திரு ஜெயராஜன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் எங்களுடன் பணியாற்றும் திருமதி ஜெயமணி அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பு பணியை செவ்வனே செய்தார்கள். திரு ரோகித் நன்றியுரை நவின்றபின் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் திருமதி நந்தினி திருமதி லக்ஷ்மி ஆகியோர் செவ்வனே செய்திருந்தார்கள். அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சிலப் புகைப்படங்கள் மேலே வெளியிடப்பட்டுள்ளது.